காஞ்சீபுரம் மாவட்டத்தில் 17 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடிப்பு ரூ.8 லட்சம் இழப்பீட்டு தொகை வசூல்
காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் அமலாக்க அதிகாரிகள், காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மின் நுகர்வோர்களுக்கு ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 595 இழப்பீட்டு தொகையாக விதிக்கப்பட்டது.
மேலும் குற்றவியல் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக கூடுதலாக ரூ.78 ஆயிரம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான புகார்களை 9445857591 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story