கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன், அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உதவி கலெக்டர் சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுசீலாராணி, நகராட்சி ஆணையாளர் ரமேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் தென்னரசு, கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் 110 விதியின் கீழ் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 1.1.2019 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், தட்டுகள், உறிஞ்சு குழல்கள், முலாம் பூசப்பட்ட டீ கப்புகள், பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கொடிகள், தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மாற்றாக பேப்பர் ரோல், வாழை இலை, பாக்குமட்டைகள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோக டம்ளர்கள், துணி, காகிதம், சணல் பைகள், சில்வர் பாத்திரங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் கிருஷ்ணகிரியில் உள்ள கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகளுக்கு நேரடியாக சென்று பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தில் மாசு கட்டுப்பாட்டு துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி, கல்வி நிறுவனங்கள், அரிமா சங்கத்தைச் சேர்ந்த அலுவலர்கள், அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகளில் சென்றது.

Related Tags :
Next Story