யவத்மாலில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 4 குழந்தைகள் பிறந்தன
யவத்மாலில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 4 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
நாக்பூர்,
யவத்மால் மாவட்டம் தர்வா தாலுகா சிக்லி கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத் ரதோட். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்தநிலையில் ராணி மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து டாக்டர்கள் நடத்திய சோனோகிராபி பரிசோதனையில் அவரின் வயிற்றில் 4 கருக்கள் வளர்வது தெரியவந்தது.
இதையடுத்து கவனமுடன் டாக்டர்கள் கூறிய அனைத்து சிகிச்சை முறைகளையும் ராணி பின்பற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர் கடந்த 25-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டு யவத்மாலில் உள்ள வசத்ராவ் நாயக் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ராணிக்கு சுகப்பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன.
சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டதால் அந்த பெண் எந்த பிரச்சினையும் இன்றி 4 குழந்தைகளையும் பெற்றெடுத்ததாகவும், இருப்பினும் பிறந்த குழந்தைகள் எடை குறைவாக இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேலும் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் உடல் நலம் சீராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேபோல தானே மாவட்டம் பிவண்டியில் கடந்த 10-ந் தேதி ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story