இன்டர்நெட் நமது எண்ணத்தை மாற்றுமா?
தொடர்ந்து இன்டர்நெட் பயன்படுத்துவது நமது எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிடக்கூடியது என்று புதிய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இன்டர்நெட் நமது எண்ணத்தைப் பாதிக்குமா? என்பது பற்றிய சுவாரஸ்யமான ஆய்வில் ஈடுபட்டது கிரீன்பீல்டு நகரத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர்கள் குழு. ஆய்வில் தெரியவந்த சில விஷயங்கள்...
2014-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகில் 6 சதவீதம் பேர் இன்டர்நெட் அடிமைகளாக இருப்பதை உறுதி செய்தனர். இந்த எண்ணிக்கை இப்போது இரு மடங்காகி இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.
மக்கள் இன்டர்நெட் அடிமையாக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இணைய பழக்க வழக்கத்தால் மூளையில் சுரக்கும் புதிய ரசாயனம்தான். போதைப் பொருட்கள் மூளையில் உருவாக்கும் மாற்றத்தைப்போல, இன்டர்நெட் பழக்கமும் டோபமைன் ரசாயனப் பொருளை சுரந்து ஒருவகை மயக்க நிலையை உருவாக்குகிறதாம்.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் புகைப்படங்களால் நமது மூளை கிளர்ச்சி அடைவதாகவும், அது டோபமைன் சுரக்க காரணமாக இருப்பதும் தெரியவந்தது. நமது புகைப்படங்கள், போஸ்ட்களை மற்றவர்கள் அதிகமாக ரசிக்க வேண்டும், லைக்ஸ் அள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இத்தகைய ரசாயனம் சுரக்க காரணமாகிறது. அதுவும் 14 முதல் 18 வயதுடையவர்களின் மூளையில் இந்த செயல் வேகமாக நடைபெறுவதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இணையதளம் நமது மூளைக்கு பல்வேறு பணிகளை அடுத்தடுத்து கொடுப்பதன் மூலம் சோர்வடையவும், குறிப்பிட்ட பகுதியின் செயல்தன்மையை மந்தப்படுத்தவும் செய்கிறது. நாளடைவில், இணையம் காட்டுவதையெல்லாம் மூளை நம்பி செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. இது மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஞாபகசக்தியில் பின்னடைவை உருவாக்குகிறது. அதனால்தான் இப்போதைய தலைமுறையினர் எளிமையான கணக்குகளுக்கும், எளிய கேள்விகளுக்குமான விடையை ஞாபகசக்தியில் இருந்து சொல்வதைவிட, முதலில் இணையதளத்தை தேடிச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
ஆராய்ச்சியாளர்கள் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, வழக்கமான நேரத்தில் செயல்படும் மூளைப்பகுதி, இன்டர்நெட் பயன்படுத்தும் சமயத்தில் வெளிர் நிறத்துக்கு மாறுகின்றது. இது நமது சிந்தனைத் திறனில் ஏற்படும் மாற்றத்தை படம்பிடித்துக் காட்டுகிறது.
ஆய்வின் ஒரு கட்டமாக படிக்காத சிறுவர்கள் 28 பேரையும் இன்டர்நெட் பயன்படுத்தச் செய்து அவர்களின் மூளையை படம் பிடித்தனர். அதில் ஒரே ஒரு நல்ல விஷயமாக அவர்களது எழுதப்படிக்க உதவும் மூளைப்பகுதி சிறப்பாக தூண்டப்பட்டது அறியப்பட்டது.
இணையதளம் என்பது நமது கையில் இருக்கும் கூரிய ஆயுதம் போன்றது, அது சில நல்ல எண்ணங்களைத் தூண்டுவதுடன், நமது எண்ணத்தில் பலவிதமான மாறுதலை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது என்கின்றது ஆராய்ச்சி முடிவு.
இணையதளத்தை நன்மைக்குப் பயன்படுத்தி நன்மையை அறுவடை செய்வோமாக!

Related Tags :
Next Story