திருவள்ளூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அருகே ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள், பொன்னேரி தாயுமானச்செட்டி தெருவைசேர்ந்த ஜெயராமன் (வயது 51), தம்புரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (40) என்பது தெரியவந்தது.
ஜெயராமனிடம் இருந்து 28 மதுபாட்டில்களையும், சுப்பிரமணியிடம் இருந்து 28 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதே போல கும்மிடிப்பூண்டியை அடுத்த வேற்காடு அருகே உள்ள டாஸ்மாக் கடை வாசலில் மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிரி கிராமத்தை சேர்ந்த முருகன்(35) என்பவரிடம் இருந்து 28 மது பாட்டில்களையும், பாலகிருஷ்ணாபுரத்தில் பெட்டிக்கடையில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த தனசீலன் (45) என்பவரிடம் இருந்து 29 மதுபாட்டில்களையும், கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரில் தனியார் திருமண மண்டபத்திற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட ராஜாவிடம் (32) இருந்து 26 மது பாட்டில்களையும், கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட காந்தி நகரை சேர்ந்த செல்வத்திடம் (34) இருந்து 27 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மது விற்பனையில் ஈடுபட்ட மேற்கண்ட 6 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story