கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய மாணவனின் உடல் கரை ஒதுங்கியது


கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய மாணவனின் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 29 Aug 2018 3:30 AM IST (Updated: 29 Aug 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

கடலில் குளித்தபோது அலையில் சிக்கி பலியான மாணவனின் உடல் கரை ஒதுங்கியது. மற்றொருவரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

புதுச்சேரி,

புதுவை கடற்கரை செயற்கை மணல் பரப்பு பகுதியில் நேற்று முன்தினம் முதலியார்பேட்டை உடையார்தோட்டம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பிரபு மகன் பிரதீப் (வயது 16), ரமேஷ் மகன் கபிலன் (16) ஆகியோர் கடலில் குளித்தனர். அரசு தொழில்நுட்ப பள்ளி மாணவர்களான இவர்களை அப்போது எழுந்த ராட்சத அலை சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது.

அவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை தேடும்பணியில் கடலோர பாதுகாப்பு போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் மாணவன் பிரதீப்பின் உடல் செயற்கை மணல்பரப்பு அருகிலேயே கரைஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதிக்கு வந்தவர்கள் பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவருடன் குளித்த மற்றொரு மாணவரான கபிலன் கதி என்ன? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்து வருகிறது.


Next Story