அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் படுத்து பொதுமக்கள் போராட்டம் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தொட்டியம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் படுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொட்டியம்,
தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்களது கிராமத்திலிருந்து காட்டுப்புத்தூருக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும்–குழியுமாக உள்ளது, கிராமத்தில் குடிநீர் வினியோகம் சரிவர இல்லை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று காலிக்குடங்களுடன் திருச்சி–நாமக்கல் சாலையில் மேய்க்கல்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். அவர்களில் சிலர் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி–நாமக்கல் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்றன.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தொட்டியம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக திருச்சி–நாமக்கல் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story