தூத்துக்குடி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள சிறப்பு மேளா 3 நாட்கள் நடக்கிறது


தூத்துக்குடி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள சிறப்பு மேளா 3 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 29 Aug 2018 3:00 AM IST (Updated: 29 Aug 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள சிறப்பு மேளா வருகிற 3-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் நடக்கிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள சிறப்பு மேளா வருகிற 3-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

சிறப்பு மேளா

தூத்துக்குடி மாநகராட்சி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகளை துரிதமாக வழங்கிட வருகிற 3-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5-ந்தேதி வரை 3 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் சிறப்பு மேளா நடைபெற உள்ளது.

இங்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறவும், அந்த சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளவும், காலிமனை வரிவிதிப்பு, குடியிருப்புகளுக்கான சொத்து வரி விதிப்பு, தொழில் வரி விதிப்பு மற்றும் சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்யவும், ஏற்கனவே பகிர்மான குழாய்கள் அமைய பெற்றுள்ள இடங்களில் குடிநீர் இணைப்பு வழங்குதல் தொடர்பாகவும், கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்குதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை அங்கீகரித்தல் தொடர்பான அடிப்படை வசதியை பெறலாம்.

விண்ணப்பம்

எனவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு தேவையான சேவைகளை உரிய விண்ணப்பம் மற்றும் சேவைகளு க்கான கட்டணங் களை செலுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story