நாங்குநேரி அருகே வேனின் டயர் வெடித்து 15 பேர் காயம்
நாங்குநேரி அருகே வேனின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
நாங்குநேரி,
நாங்குநேரி அருகே வேனின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
மேளக்கலைஞர்கள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மேளக்கலைஞர்கள் 16 பேர் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கோவில் விழாவுக்கு வந்தனர்.
அவர்கள் வந்த வேன் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை அடுத்த நான்கு வழிச்சாலை பகுதியில் வந்தது. அப்போது, திடீரென்று வேனின் டயர் வெடித்து, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் அலறினார்கள். இதுகுறித்து உடனடியாக நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் வேனில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்டனர்.
15 பேர் காயம்
இந்த சம்பவத்தில் வேனில் இருந்த சுனிதா (வயது 29), வினு (28), பூஜா (18), ராஜன் (54) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story