செப்டம்பர் 1–ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


செப்டம்பர் 1–ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:30 AM IST (Updated: 29 Aug 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

செப்டம்பர் மாதம் 1–ந் தேதி முதல் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம் செய்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:– செப்டம்பர் மாதம் 1–ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதன் தொடாச்சியாக 1.1.2019–ஐ தகுதி நாளாக கொண்ட சிறப்பு சுருக்குமுறை திருத்த பணிகள் 1.9.2018 முதல் 31.10.2018 வரை நடைபெற உள்ளது.

31.12.2000 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த (18 வயது பூர்த்தியடைந்தவர்கள்) அனைத்து நபர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். மேலும் திருத்தம், முகவரி மாற்றம், நீக்கம் ஆகிய பணிகளை உரிய படிவங்களில் விண்ணப்பித்து மேற்கொள்ளலாம். இதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் வாக்குசாவடி முகவர்களை நியமிக்க அறிவுறித்தி உள்ளது. ஆகவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அனைத்து வாக்குசாவடிகளுக்கும் தங்கள் முகவர்களை நியமித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம் முகாமில் பங்கேற்று, சரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்க தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் அலுவலர்களான நாமக்கல் சப்–கலெக்டர் கிராந்தி குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் துணை அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story