நெல்லையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி மாணவிகள் கண்டுகளித்தனர்
வளரினம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி நெல்லையில் நடந்தது.
நெல்லை,
வளரினம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி நெல்லையில் நடந்தது. இதனை பள்ளி மாணவிகள் கண்டுகளித்தனர்.
பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி
வளரினம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் சுமங்கலி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்த பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி நேற்று நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியை நாச்சியார் என்ற ஆனந்தபைரவி தலைமை தாங்கினார். குழந்தைகள் நலக்குழு தலைவர் நளன்சந்திரசேகர் கலந்து கொண்டு பொம்மலாட்ட நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசினார்.
பொம்மலாட்ட கலைஞர் கலைவாணன் குழுவினர் பொம்மைகளை வைத்து வளரினம் பெண்களின் தொடர்கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து ஆட்டம் போட்டு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
மேலும் சுமங்கலி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனை மாணவிகள் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சந்திரகுமார், நம்பி, பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர் சுப்பையா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story