வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மராட்டிய அரசு சார்பில் 50 டன் துவரம் பருப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மராட்டிய அரசு சார்பில் 50 டன் துவரம் பருப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
மும்பை,
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மராட்டிய அரசு சார்பில் 50 டன் துவரம் பருப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
துவரம் பருப்பு
கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து சாப்பிட வசதியாக துவரம் பருப்பு அனுப்பி வைக்க மராட்டிய அரசு முடிவு செய்தது. அதன்படி நேற்று 50 டன் துவரம் பருப்பு மூட்டைகளை நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. லோக்மான்ய திலக் டெர்மினசில் இருந்து புறப்பட்ட அந்த ரெயிலை மராட்டிய வருவாய் மற்றும் விவசாயத்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
துயரத்தில் தவிக்கும் கேரளாவுக்கு மராட்டிய அரசு சார்பில் ஏற்கனவே ரூ.20 கோடியும், மராட்டிய மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.10 கோடியும் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த நிதி கேரளாவில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி தேவைக்காக 50 டன் துவரம் பருப்பை அனுப்பி வைத்து உள்ளோம். சாங்கிலி மாவட்டத்தில் இருந்து அதிகளவு பிஸ்கெட் பாக்கெட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருந்து பொருட்கள்
இதற்கிடையே மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மக்களுக்கு மராட்டிய அரசு சார்பில் சுத்தமான குடிநீரை அனுப்பி வைத்தோம். 86 வகையான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் நீரிழிவு, ரத்த கொதிப்பு நோய்க்கான மருந்துகளும் அடங்கும். அந்த மருந்து பொருட்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மருத்துவ கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
மேலும் மழைக்கு பிந்தைய தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும் வகையில் நிபுணர் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story