விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன் தியாகிகளின் குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி உதவி
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்தியநடிகர் அமிதாப்பச்சன், தியாகிகளின் குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி வழங்கி உதவி புரிந்து உள்ளார்.
மும்பை,
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன், தியாகிகளின் குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி வழங்கி உதவி புரிந்து உள்ளார்.
நடிகர் அமிதாப்பச்சன்
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று மும்பையில் டி.வி. நிகழ்ச்சி தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை படிக்கும்போது மிகவும் வேதனை அடைகிறேன். ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வருந்தினேன். அப்போது 40 முதல் 50 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவி அளித்தேன்.
ரூ.1½ கோடி
தற்போது வங்கிகளிடம் இருந்து பெயர் பட்டியலை பெற்று 200 விவசாயிகள் வாங்கிய ரூ.1 ேகாடியே 50 லட்சத்துக்கான கடனை செலுத்தி இருக்கிறேன்.
மேலும் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் 44 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளேன். அரசிடம் இருந்து அந்த தியாகிகளின் பெயர் பட்டியலை பெற்று அவர்களது மனைவி மற்றும் தாய், தந்தையர்களுக்கு ரூ.1 கோடியை பகிர்ந்து அளித்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story