வசாயில் பயங்கரம் அக்காளை கொலை செய்த தம்பி கைது ஆண் நண்பர்களுடன் பழகியதால் வெறிச்செயல்
வசாயில், ஆண் நண்பர்களுடன் பழகிய அக்காளைஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
பால்கர்,
வசாயில், ஆண் நண்பர்களுடன் பழகிய அக்காளைஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
ஆண் நண்பர்களுடன் பழக்கம்
பால்கர் மாவட்டம் வசாய், வாலிவ் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், ஆண் நண்பர்களிடம் சகஜமாக பழகி வந்துள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் தவறாக பேசி உள்ள னர். இதனால் வேதனை அடைந்த இளம்பெண்ணின் 17 வயது தம்பி அவரை ஆண் நண்பர்களுடன் பழக வேண்டாம் என கண்டித்துள்ளார்.
மேலும் தனது அக்காளை அடித்து வீட்டில் சிறைப்பிடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இளம்பெண் ஆண் நண்பர்களுடன் பேசுவதை நிறுத்தவில்லை என தெரிகிறது.
கழுத்தை நெரித்து கொலை
இந்தநிலையில் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் இந்த பிரச்சினை குறித்து அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் உண்டானது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஒருகட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய வாலிபர் அக்காளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அக்காளை கொலை செய்த தம்பியை அதிரடியாக கைது செய்தனர்.
Related Tags :
Next Story