பத்லாப்பூர் அருகே தாயை கத்தியால் குத்திய மகன் கைது டி.வி.யில் பக்தி பாடலை மாற்ற மறுத்ததால் ஆத்திரம்


பத்லாப்பூர் அருகே தாயை கத்தியால் குத்திய மகன் கைது டி.வி.யில் பக்தி பாடலை மாற்ற மறுத்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 29 Aug 2018 5:07 AM IST (Updated: 29 Aug 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

டி.வி.யில்பக்தி பாடலை மாற்ற மறுத்ததால் தாயை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத்,

டி.வி.யில்பக்தி பாடலை மாற்ற மறுத்ததால் தாயை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.

கத்தியால் குத்தினார்

தானே மாவட்டம் பத்லாப்பூர் அருகே உள்ள அப்டே வாடி பகுதியை சேர்ந்தவர் சுனிதா (வயது44). இவரது மகன் ஆகாஷ் (21). சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் சுனிதா வீட்டில் உள்ள டி.வி.யில் பக்தி பாடல்கள் கேட்டு கொண்டு இருந்தார். அப்போது ஆகாஷ் பாடலை மாற்றும் படி தாயிடம் கூறினார். ஆனால் அவர் பாடலை மாற்ற மறுத்ததாக தெரிகிறது.

இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆகாஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தினார்.

மகன் கைது

இதில் வலி தாங்க முடியாத சுனிதா அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சுனிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த பத்லாப்பூர் போலீசார் தாயை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

Next Story