தினம் ஒரு தகவல் : என் தபால் தலை
இந்தியாவில் நடைபெற்ற இண்டிபெக்ஸ் 2011 எனும் உலக தபால் தலை சேகரிப்பு கண்காட்சியின்போது என் தபால் தலை எனும் பெயரில் தனி நபர்களின் உருவங்களுடன் தபால் தலைகள் வெளியிடும் திட்டத்தை இந்திய தபால் துறை அறிவிப்பு செய்தது.
நமது நண்பர்கள் அல்லது உறவினர்கள் பெற்ற வெற்றியை சிறப்பிக்கும் வகையில் அவர்களுடைய உருவம் கொண்ட தபால் தலையை இதன் மூலம் வெளியிட்டு அவருக்குச் சிறப்பு செய்ய முடியும். இதுபோல் நம்முடன் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் போன்றவர்களின் பணி பாராட்டு விழா அல்லது பணி நிறைவுக்கான பிரிவு உபசார விழா, குழந்தைகள் பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா மற்றும் சிறப்பு விழாக்கள் போன்றவைகளில் தொடர்பு உடையவர்களின் உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு அவரைச் சிறப்பிக்க முடியும்.
தபால்தலை சேகரிப்பு சிறப்பு சேவையகம், முக்கிய தபால் அலுவலகங்கள் மற்றும் சுற்றுலாத்தலம் அமைந்திருக்கும் இடங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் போன்றவற்றில் என் தபால்தலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு என் தபால்தலை வெளியீட்டிற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து வழங்கி ஒரு தாளுக்கு ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
அத்துடன் மத்திய அரசு அல்லது மாநில அரசு வழங்கிய நம்முடைய அடையாள அட்டை நகல், நாம் சிறப்பிக்க விரும்புபவர்களின் மார்பளவு புகைப்படம் மற்றும் சிறப்புப் படம் போன்றவைகளை குறுந்தகடு மூலமாக இணைத்து அளிக்க வேண்டும். கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் போன்றவற்றின் இலச்சினைகள், சுற்றுலா தலங்கள், கலை வேலைப்பாடுடைய படைப்புகள், மரபுரிமையுடைய கட்டிடங்கள், வரலாற்று நகரங்கள், காட்டுயிர்கள் போன்ற ஏதாவது ஒன்றினை சிறப்புப் படமாக இணைத்து அளிக்கலாம்.
இதை பெற்றுக் கொள்ளும் தபால் அலுவலகத்தினர் எட்டாவது நாளில் நாம் சிறப்பிக்க விரும்பிய நபரின் உருவம் கொண்ட 12 தபால்தலை கொண்ட சிறப்பு தபால்தலை தாளினை நமக்கு அளிக்கின்றனர். நாம் சிறப்பிக்க விரும்புபவரின், சிறப்பு நாளுக்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பித்துச் சிறப்பு தபால்தலை தாளைப் பெற்றுக் கொள்வது நல்லது. இந்தச் சிறப்பு தபால்தலைகளுக்கு இறந்தவர்களின் உருவம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனி நபர்களுக்கு ரூ.300 செலவில் சிறப்பு தபால்தலை வெளியிட்டுச் சிறப்பிக்க முடியும் என்பதால் நாம் நமக்குப் பிடித்தவர்கள், நண்பர்கள் போன்றவர்கள் வெற்றியினை அல்லது அவர்களது சிறப்புகளை பாராட்டும் விதமாக அவரது படத்துடனான தபால்தலையை வெளியிட்டுச் சிறப்பிக்கலாம். அவரது மகிழ்ச்சியையும் அதிகரிக்கலாம்.

Related Tags :
Next Story