பிச்சை எடுத்தல் குற்றமா?
டெல்லி உயர்நீதிமன்றம் பிச்சையெடுத்தலைக் குற்றமெனக் கூறும் சட்டம் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும், பிச்சையெடுத்தல் குற்றச் செயல் அல்ல என்றும் தீர்ப்பளித்துள்ளது.
‘யாரும் விரும்பிப் பிச்சை எடுப்பதில்லை. சமூகப் பொருளாதாரக் காரணிகளால் அவர்கள் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 1959-ல் இயற்றப்பட்ட பம்பாய் பிச்சையெடுத்தல் தடைச் சட்டத்தைத் டெல்லி உள்பட பல மாநிலங்கள் சுவீகரித்துக் கொண்டன.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பிச்சையெடுத்தல் சட்டப்படிக் குற்றமாகும். தமிழ்நாட்டிலும் பிச்சை எடுத்தல் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்தச் செய்தியின் தாக்கங்கள் என்ன? பிச்சையெடுத்தலைச், சரியான வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கான உதவி, சமூக அவலம், தொழில் என்ற கோணங்களில் பார்க்கலாம். ஆனால் கேட்டுப் பெறும் உதவி, தமது திறமையைக் காட்டி உதவி கேட்டல் என அனைத்தையுமே ‘பிச்சை எடுத்தல்’ என்று வரையறுத்துள்ளதுதான் இந்தச் சட்டத்தின் சிக்கல்.
‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்றும் ‘ஈவது விலக்கேல்’ என்றும் படித்து வளர்ந்த நமக்கு இந்த வாதம் பொருந்தாது. பிச்சையெடுத்தல் குற்றச்செயல் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
சமச்சீரான சமுதாயத்தில் வளங்கள் எல்லோருக்கும் அவரவர் தேவைக்கேற்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும். எனவே யாரும் தமது அடிப்படைத் தேவைகளுக்கெனப் பிறரைச் சார்ந்திருக்கும் நிலைவராது. அத்தகையச் சமுதாயத்தைக் கட்டமைப்பதுதான் நல்லாட்சி செய்யும் அரசின் கடமை.
அரசியலமைப்புச் சட்டவிதி 21, 41, 43 ஆகியவற்றை படித்தால் இது புரியும். மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது அரசின் இயலாமையைக் காட்டும்.
ஆதரவற்ற முதியோருக்கும், குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டத் திருநங்கைகளுக்கும் பிச்சையெடுப்பதைத் தவிர வாழ்வாதாரம் ஏதும் கிடையாது என்பது நிதர்சனம். எனவே பிச்சையெடுத்தலைக் குற்றச் செயலாகப் பார்த்தல் சரியல்ல என்ற வாதம் வைக்கப்படுகிறது. இதைத்தான் நீதிபதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சரி, அரசுக்கு மட்டும்தான் இந்தக் கடமையிருக்கிறதா? இல்லை. சமூகப் பொறுப்புள்ள குடிமகனுக்கும் இந்தக் கடமை உண்டு. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சோசலிசக் கொள்கை இதற்குச் சான்று. இதன்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் வரிகளை ஒழுங்காகச் செலுத்துதல், சொத்துக்களையும், வளங்களையும் விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்க வகைசெய்யும் சட்டங்களை மதித்து நடத்தல் ஆகியவை அடிப்படைக் கடமைகள்.
இந்திய அரசமைப்பு சோசலிச சமூகத்தை ஏற்படுத்தத்தான் எத்தனிக்கிறதேயன்றிச் சோசலிச அரசை ஏற்படுத்துவதற்கல்ல. இந்தியச் சமூகம் சாதி, மத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதால் வளங்கள் தேவை அடிப்படையிலான விகிதாசாரத்தில் அல்லாமல் சாதி அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனால் விளைந்த சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பிச்சைக்காரர்கள் உருவாக மிக முக்கியக் காரணமாகும்.
உலகமயமாக்கலுக்குப் பின் நகரங்களில் இந்தப் பிரச்சினை அதிகமாகியுள்ளது. அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் வெறும் சட்டரீதியாகப் பிச்சையெடுத்தலைத் தடை செய்வது முரணான அணுகுமுறையாகும்.
அடுத்து தொழில் முறைப்படி பிச்சையெடுத்தலைப் பார்க்கலாம். விபசாரத்துக்கு அடுத்து உலகின் மிகத்தொன்மையான தொழில் பிச்சையெடுத்தல். இது குறித்து இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமூக விரோதிகள் குழந்தைகளைக் கடத்திவந்தும், ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் போன்றோரைக் கட்டாயப்படுத்திப் பிச்சையெடுக்க வைக்கும் குற்றம் நாமறிந்ததே. இதை தடுக்கச் சட்டம் தேவையாகிறது. எனவே இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்றது என ஒதுக்க முடியாது. ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
முதலாவதாகப் பிச்சையெடுத்தலுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம். அல்லது ஏதேனும் ஒரு பணியகத்தில் பணியில் அமர்த்தலாம். ஆனால் பணியகம் என்பதற்கானச் சரியான வரையறையோ பொருளோத் தெளிவாகக் கொடுக்கப்படவில்லை.
இரண்டாவதாகக் காவல் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினை. பிச்சையெடுப்பவரைக் கைது செய்தால் அவரைப் பாதுகாப்பது பெரும் சவாலாக உள்ளது. பிச்சையெடுப்போர் பலர் நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள். ஆகையால் கைது செய்யப்படும் சிலருக்கு நல்ல உணவுகூட ஒவ்வாது இறந்து போகும் வாய்ப்பும் உள்ளது.
காவல்துறை பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் இறந்தால் சிக்கல் கூடுகிறது. இதனால் காவல்துறையினர் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வருவதில்லை. நீதிமன்றங்களும் இந்தப் பிரச்சனைக்கு எந்தத் தீர்வும் கொடுக்கவில்லை. இதனால் குழந்தைகளையும், மாற்றுத் திறனாளிகளையும் கட்டாயப்படுத்திப் பிச்சையெடுக்கச் செய்யும் சமூக விரோதிகள் சுலபமாகத் தப்பிவிடுகின்றனர்.
சரி, பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? விபசாரத் தடுப்புச்சட்டத்தின் விதி 8(பி) விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணையும் குற்றவாளியென்றே கூறுகிறது. ஆயினும் நீதிமன்றம் அந்தப் பெண்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கக் கூடாதென்றும், குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் என்று கருதி நிவாரணம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதுபோல் பிச்சையெடுப்போரையும் பாதிக்கப்பட்டோரென்று கருதி தகுந்த நிவாரணம் தர அரசு ஏற்பாடு செய்வதோடு சமூக விரோதிகளைத் தண்டிக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே இந்தச் சட்டம் முழுவதுமாக நீக்கப்படக்கூடாது ஆனால் நடைமுறைக்கு ஏதுவான சட்டமாக இருக்க வேண்டும்.
- சோ.கணேச சுப்பிரமணியன், கல்வியாளர்
Related Tags :
Next Story