வானவில் : நவீன தொழில்நுட்பத்தில் உருவான ‘நானோ’ பேனா
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்லாஅவுஸ் எனும் நிறுவனம் உலகின் மிகச் சிறிய பேனாவை வடிவமைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய பிளாஷ் லைட்டை வடிவமைத்து உருவாக்கிய இந்நிறுவனம் தற்போது நானோ பேனாவை உருவாக்கியுள்ளது. கையடக்கமான அளவில் உள்ள இந்த பேனாவை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். இதன் உயரம் வெறும் 5 செ.மீ. மட்டுமே. இதன் விட்டம் 0.75 செ.மீ. இதைவிட சிறிய பேனா இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
பேனா சிறிதாயினும் மிகவும் உறுதியானது. இதை அவ்வளவு எளிதில் உடைத்துவிடமுடியாது. நீர் புகா தன்மை கொண்டது (வாட்டர் புரூப்). நெருப்பில் இட்டாலும் சேதமடையாது. இந்த பேனா மீது கார் ஏறினாலும் நொறுங்காதாம்.
இதன் எடை சாதாரண சிறிய ரக சாவியை விட குறைவானது. பொதுவாக ஒரு சாவியின் எடை 7.5 கிராம். ஆனால் நானோ பேனாவின் எடை 4.5 கிராம் மட்டுமே. சிறிய ரக சாவி 50 மி.மீ. இருக்கும். நானோ பேனாவோ 57 மி.மீ உயரம் உடையது.
இதில் டங்ஸ்டன் கார்பைடு முனை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது டைட்டானியம் மற்றும் உருக்கை விட வலிமை மிக்கதாகும். இதனால் ஆபத்து காலங்களில் இதை கத்தி போல பயன்படுத்தலாம். முனை மழுங்காது. எழுதாமல் போகாது. இதன் வலிமைக்கு முக்கிய காரணமே, ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் உறுதியான அலுமினியம்தான். இதை கீ செயினில் மாட்டிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

Related Tags :
Next Story