வானவில் : ஸ்கேனர் மவுஸ்


வானவில் : ஸ்கேனர் மவுஸ்
x
தினத்தந்தி 29 Aug 2018 3:29 PM IST (Updated: 29 Aug 2018 3:29 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக லேப்டாப், கம்ப்யூட்டர் உபயோகத்தில் மவுஸ் மிகச் சிறப்பாக செயலாற்றக் கூடியது.

தற்போது மவுஸுடன் இணைந்த ஸ்கேனரையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். ‘ஜிகேன்’ (Zcan) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மவுஸ் வயர்லெஸ் முறையில் இயங்குகிறது. இதனால் வயர் கட்டுப்பாடின்றி இந்த மவுஸை இயக்குவதுடன், நமக்கு வேண்டிய புத்தக பக்கங்களை ஸ்கேனிங்கும் செய்து கொள்ளலாம். அவ்விதம் ஸ்கேன் செய்த விவரங்கள் கம்ப்யூட்டர், ஐ-பேட், டேப்லெட் மற்றும் லேப்டாப்பில் பதிவாகும்படி இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டிய பக்கங்களில் இந்த ஸ்கேனர் மவுஸை நகர்த்தினால் போதும், ஸ்கேன் செய்த பக்கங்கள் உங்கள் லேப்டாப்பில் வேர்டு பகுதியாகவோ அல்லது எக்ஸெல் ஷீட்டாகவோ பதிவாகி விடும்.

Next Story