வானவில் : டேபிள் டேப்லெட்
வழக்கமாக கைகளில் எடுத்துச் செல்லும் ஸ்மார்ட்போனை விட சற்று பெரிய அளவில் திரையைக் கொண்ட டேப்லெட்கள்தான் நமக்குப் பரிச்சயம்.
பிரான்ஸைச் சேர்ந்த கினெடி நிறுவனம் டேபிளாக பயன்படுத்தக் கூடிய மிகப்பெரிய டேப்லெட்டை உருவாக்கியுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இதைப் பயன்படுத்த முடியும். டீப்பாய் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டேப்லெட் மீது குளிர்பானங்களையும் வைக்கலாம்.
மிகவும் தடிமனான கண்ணாடி, வாட்டர் புரூப் தன்மையுடன் இருப்பதால் இதில் உள்ள கம்ப்யூட்டர் பாதிக்கப்படாது. தொடு திரையும் செயல்படும்.
இது 42 அங்குல திரையைக் கொண்டது. இது விண்டோஸ் 10 இயங்கு தளத்தில் இயக்கப்படுகிறது. இதில் இன்டெல் கோர் ஐ-5 பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் மற்றும் 3 பென்டிரைவ் இணைப்பு போர்ட் உள்ளன. இந்த டேப்லெட்டை உங்கள் டி.வி.யுடனும் இணைக்கலாம். அதேசமயம் வீடியோகேம் விளையாடவும் முடியும். வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் இயங்கும் அனைத்து பொருள்களையும் இதன் மூலம் இயக்கலாம்.

Related Tags :
Next Story