வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து நகை, பணம் கொள்ளையடித்த 5 பேர் சிக்கினர்


வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து நகை, பணம் கொள்ளையடித்த 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 30 Aug 2018 5:45 AM IST (Updated: 30 Aug 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே, 

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை, பணம் கொள்ளை

தானே மாவட்டம் காஷிமிரா பகுதியை சேர்ந்தவர் கோவிந்த். இவரது வீட்டிற்கு கடந்த 5-ந் தேதி 3 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கோவிந்திடம் அந்த கும்பலினர் தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டனர்.

பின்னர் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறி அங்கிருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், 10 பவுன் நகைகளை எடுத்து கொண்டனர்.

பின்னர் கோவிந்த் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் துப்பாக்கி முனையில் கயிற்றால் கட்டி போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

5 பேர் கைது

இதனால் பாதிக்கப்பட்ட கோவிந்த் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சிஞ்ச்வாட் பகுதியில் இருந்து பையாஸ் காஜி (வயது47), மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சலீம் அன்சாரி (21), மும்ராவில் இருந்து இம்ரான் அலி (25) ஆகிய 3 கொள்ளையர்கள் சிக்கினர்.

இவர்களுக்கு கொள்ளை திட்டம் வகுத்து ெகாடுத்ததாக மிராரோட்டை சேர்ந்த மானவ் சுசில் சிங் (19), சோயிப் மன்சூர் ஆகியோைரயும் போலீசார் பிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 75 ஆயிரம், 10 பவுன் நகைகள், துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

Next Story