2019 நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிவசேனா நிர்வாகிகளுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிவசேனா நிர்வாகிகளுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனையை தொடங்கி உள்ளார்.
மும்பை,
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிவசேனா நிர்வாகிகளுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனையை தொடங்கி உள்ளார்.
உத்தவ் தாக்கரே ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2019)நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா காய் நகர்த்தி வருகிறது. ஆனால் சிவசேனா தேர்தலை தனியாக சந்திக்க தயாராகி வருகிறது.
இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மராட்டியத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அவர் மண்டலம் வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
வாக்காளர் பட்டியல்
இந்த ஆலோசனை நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கியது. அப்போது உத்தவ் தாக்கரே மும்பையில் தேர்தல் முன் ஏற்பாடுகளை தொடங்குமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவசேனா மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘‘தேர்தல் வியூகங்களை முடிவு செய்வதற்காக இந்த கூட்டம் நடந்தது. அப்போது மும்பையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் நிலவரம் குறித்து பேசப்பட்டது’’ என்றார்.
அனில் தேசாய் எம்.பி. கூறும்போது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அதை எதிர்கொள்வது குறித்து பேச இந்த கூட்டம் நடந்தது என்றார்.
Related Tags :
Next Story