சிறுவன் ஓட்டிய ஷேர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்தது 9 பேர் படுகாயம்
பேரணாம்பட்டு அருகே சிறுவன் ஓட்டிய ஷேர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்தது 9 பேர் படுகாயம்.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டில் இருந்து நேற்று மாலை 13 பேருடன் ஒரு ஷேர் ஆட்டோ ரங்கம்பேட்டை கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ஷேர்ஆட்டோவை 16 வயது சிறுவன் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. பேரணாம்பட்டு அருகே சிவனகிரி கிராமம் அருகில் மேடான பகுதியில் ஒரு வளைவில் திரும்ப முயன்றது. அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் புகுந்து கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த கண்ணம்மாள் (60), சத்யகுமார் (36), யோவேல் (55), யோவான் (37), தமிழரசன் (45), கல்யாணி (42), ராதா (55), மோட்டார் சைக்கிலில் வந்த ராம்தீப் (34), அவரது மனைவி அசோக்குமார் (22) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஷேர்ஆட்டோவை ஓட்டிச்சென்ற சிறுவன் காயமின்றி தப்பினான். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.