கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு பணியில் டாக்டர் இல்லாததே காரணம் என உறவினர்கள் புகார்


கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு பணியில் டாக்டர் இல்லாததே காரணம் என உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 30 Aug 2018 3:45 AM IST (Updated: 30 Aug 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் டாக்டர் இல்லாததே காரணம் என அந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

கயத்தாறு, 

கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் டாக்டர் இல்லாததே காரணம் என அந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

கூலி தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி (வயது 23). கர்ப்பமாக இருந்த இவர் கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு நேற்று குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் செல்வராணியை அவரது குடும்பத்தினர் கடம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது பணியில் டாக்டர் இல்லை. செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். தொடர்ந்து செல்வராணியை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆண் குழந்தை இறந்தது

இதற்கிடையே நேற்று அதிகாலை 3.45 மணியளவில் செல்வராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து டாக்டர் இல்லாமலேயே செல்வராணிக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் செல்வராணிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செல்வராணியின் உறவினர்கள் கூறுகையில், ‘பணியில் டாக்டர் இல்லாததால் செல்வராணியை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக நாங்கள் கூறியும் செவிலியர்கள் அனுமதிக்கவில்லை. இரவில் டாக்டர் வந்து விடுவதாக கூறினர். நேற்று (நேற்று முன்தினம்) காலை முதல் இரவு வரையிலும் டாக்டர் பணியில் இல்லை.

இதனால் தான் இந்த நிலை ஏற்பட்டது. எனவே அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத டாக்டர் மீதும், கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Next Story