இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு: மர அறுவை ஆலை அதிபர் வீட்டில் திடீர் சோதனை
இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள மரஅறுவை ஆலை அதிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை,
இந்து முன்னணியின் கோவை மாநகர அமைப்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த முபாரக் (வயது 35), சதாம் உசேன் (27) சுபேர் (33), அபுதாகீர் (32) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரை கைது செய்தனர்.
கைதான 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை கணபதியில் பெயிண்டரான ஹக்கீம் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க சசிகுமாரை வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு எல்.ஆர்.குமார் தலைமையில் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக கோவையில் என்.ஐ.ஏ. அலுவலகமும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலையில் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை சாய்பாபா காலனி காமராஜர் ரோட்டை சேர்ந்த ஷாஜகான் என்பவரின் மகன் முன்னா (30) வீட்டிற்கு சென்றனர். இது போல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுகத் அலி தலைமையில் அதிகாரிகள் கண்ணப்பநகரில் உள்ள முன்னாவுக்கு சொந்தமான மரஅறுவை ஆலைக்கு சென்றனர்.
அங்கு காலை 10.15 மணிக்கு சோதனை தொடங்கியது. எனவே அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை நடந்தபோது சிலர் அங்கு வந்து எதற்காக சோதனை செய்கிறீர்கள் என்று கேட்டு சத்தம் எழுப்பினார்கள். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
வீடு மற்றும் மரஅறுவை ஆலையில் காலை முதல் மாலை 5.30 மணி வரை சோதனை நீடித்தது. பின்னர் வீடு மற்றும் ஆலையில் இருந்து வெளியே வந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக முன்னாவின் தந்தை ஷாஜகானிடம் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நாங்களும் அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினோம். அவரும் வந்து ஆஜராகி பதில் கூறினார். ஆனால் மரஅறுவை ஆலை அதிபர் முன்னாவை ஆஜராகும்படி சம்மன் அனுப்பினோம். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
ஏன் ஆஜராகவில்லை என்று அவருடைய தந்தை ஷாஜகானிடம் கேட்டபோது, அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் என்று கூறினார்கள். இதையடுத்து சர்வதேச போலீஸ் உதவியுடன் அவர் பணியாற்றும் நாட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து தான் அவருடைய வீடு மற்றும் மரஅறுவை ஆலையில் சோதனை செய்யப்பட்டு உள்ளது.
இந்த சோதனையின் போது முன்னா வீட்டில் இருந்து ஒரு செல்போன், சிம்கார்டுகள், டி.வி.டி.க்கள், பென்டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்பட 21 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த டி.வி.டி.க்கள், பென்டிரைவ் மற்றும் ஆவணங்களில் இருப்பது என்ன? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முபாரக், சதாம் உசேன், சுபேர் மற்றும் அபுதாகீர் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி, செல்போன்கள், சிம்கார்டுகள், பென்டிரைவ் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் முபாரக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஒரு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதும், கைதான 4 பேரும் தலைமறைவாக இருந்தபோது அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த அமைப் பை சேர்ந்த சிலரை நேரில் வந்து ஆஜராகும்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். அதில் ஆஜரானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையில் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை சாய்பாபா காலனி காமராஜர் ரோட்டை சேர்ந்த ஷாஜகான் என்பவரின் மகன் முன்னா (30) வீட்டிற்கு சென்றனர். இது போல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுகத் அலி தலைமையில் அதிகாரிகள் கண்ணப்பநகரில் உள்ள முன்னாவுக்கு சொந்தமான மரஅறுவை ஆலைக்கு சென்றனர்.
அங்கு காலை 10.15 மணிக்கு சோதனை தொடங்கியது. எனவே அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை நடந்தபோது சிலர் அங்கு வந்து எதற்காக சோதனை செய்கிறீர்கள் என்று கேட்டு சத்தம் எழுப்பினார்கள். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
வீடு மற்றும் மரஅறுவை ஆலையில் காலை முதல் மாலை 5.30 மணி வரை சோதனை நீடித்தது. பின்னர் வீடு மற்றும் ஆலையில் இருந்து வெளியே வந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக முன்னாவின் தந்தை ஷாஜகானிடம் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நாங்களும் அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினோம். அவரும் வந்து ஆஜராகி பதில் கூறினார். ஆனால் மரஅறுவை ஆலை அதிபர் முன்னாவை ஆஜராகும்படி சம்மன் அனுப்பினோம். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
ஏன் ஆஜராகவில்லை என்று அவருடைய தந்தை ஷாஜகானிடம் கேட்டபோது, அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் என்று கூறினார்கள். இதையடுத்து சர்வதேச போலீஸ் உதவியுடன் அவர் பணியாற்றும் நாட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து தான் அவருடைய வீடு மற்றும் மரஅறுவை ஆலையில் சோதனை செய்யப்பட்டு உள்ளது.
இந்த சோதனையின் போது முன்னா வீட்டில் இருந்து ஒரு செல்போன், சிம்கார்டுகள், டி.வி.டி.க்கள், பென்டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்பட 21 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த டி.வி.டி.க்கள், பென்டிரைவ் மற்றும் ஆவணங்களில் இருப்பது என்ன? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story