கர்நாடக கடலோர மாவட்டங்களில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை


கர்நாடக கடலோர மாவட்டங்களில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2018 4:00 AM IST (Updated: 31 Aug 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக கடலோர மாவட்டங்களில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. கமல் பந்த் தெரிவித்துள்ளார்.

மங்களூரு, 

கர்நாடக கடலோர மாவட்டங்களில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. கமல் பந்த் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. கமல் பந்த் நேற்று மங்களூருவுக்கு வந்தார். மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிர நடவடிக்கை

கர்நாடகத்தில் போலீஸ்காரர்கள் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களில் தான் அதிகமாக போலீஸ்காரர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதன்காரணமாக தற்போது உள்ள போலீஸ்காரர்களுக்கு பணிசுமை அதிகமாக உள்ளது. இதனால், போலீஸ்காரர்களின் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று போலீஸ் மந்திரிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு சவாலாக உள்ளது. கர்நாடக கடலோர மாவட்டங்களில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் போலீஸ்காரர்கள் யாராவது தொடர்பில் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து விசாரணை

மங்களூருவில் உள்ள பெரிய நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த இங்கு வந்தேன். அந்த நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லை. அவ்வாறு நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தால், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சிரூர் மடாதிபதி மரண வழக்கில் தடய அறிவியல் அறிக்கை வந்துள்ளது. அதில், மடாதிபதி இயற்கையாகவே இறந்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கை வந்த பிறகே இது இயற்கை மரணமா? அல்லது கொலையா? என்பது தெரியவரும். சிரூர் மடாதிபதி மரண விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் டி.ஆர்.சுரேஷ் அவருடன் இருந்தார்.

Next Story