சக்ரேபையலு யானைகள் பயிற்சி முகாமில் ‘குந்தி’ யானை, குட்டி ஈன்றது
சக்ரேபையலு யானைகள் பயிற்சி முகாமில் ‘குந்தி’ என்ற பெண் யானை நேற்று குட்டி ஈன்றது.
சிவமொக்கா,
சக்ரேபையலு யானைகள் பயிற்சி முகாமில் ‘குந்தி’ என்ற பெண் யானை நேற்று குட்டி ஈன்றது.
யானைகள் பயிற்சி முகாம்
சிவமொக்கா அருகே சக்ரேபையலு யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாமில் 13 ஆண் யானைகளும், 8 பெண் யானைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் ‘குந்தி’ என்ற பெண் யானையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த யானைக்கு 22 வயது ஆகிறது.
குந்தி யானை, நிறைமாத கர்ப்பமாக இருந்தது. அந்த யானையை, வனத்துறையினரும், பயிற்சி முகாம் அதிகாரிகளும் தொடர்ந்து தீவிரமாக கவனித்து வந்தனர். அந்த யானைக்கு தொடர்ந்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
ஆண் குட்டி ஈன்றது
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில், குந்தி யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த யானை, பயிற்சி முகாமில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், ஆண் குட்டி ஈன்றது. யானையின் சத்தம் கேட்டு, வனத்துறையினரும், பயிற்சி முகாம் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குந்தி யானை ஆண் குட்டி ஈன்றது தெரியவந்தது.
இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் அங்கு விரைந்து சென்று குந்தி யானைக்கும், குட்டி யானைக்கும் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அந்த யானைகள் சக்ரேபையலு யானைகள் பயிற்சி முகாமிற்கு அழைத்து வரப்பட்டன.
தொடர்ந்து சிகிச்சை
அங்கு வைத்து 2 யானைகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குந்தி யானை, தற்போது குட்டி ஈன்றதன் மூலம் சக்ரேபையலு யானைகள் பயிற்சி முகாமில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story