காயல்பட்டினத்தில் பரிதாபம் குடியிருந்த வீட்டை மகள் வாடகைக்கு விட்டதால் எலக்ட்ரீசியன் தற்கொலை
காயல்பட்டினத்தில் குடியிருந்த வீட்டை மகள் வாடகைக்கு விட்டதால், எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினத்தில் குடியிருந்த வீட்டை மகள் வாடகைக்கு விட்டதால், எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
எலக்ட்ரீசியன்தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்தவர் மியான்கான் (வயது 70). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி இப்ராகிம் உம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மியான்கான் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மியான்கான் தன்னுடைய பிள்ளைகளுக்கு சொத்துகளை பிரித்து கொடுத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மூத்த மகள் பீவி பாத்திமா தன்னுடைய தந்தை வசித்த வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கினார். பின்னர் அவர், அந்த வீட்டை மற்றொருவருக்கு வாடகைக்கு விட ஏற்பாடு செய்தார். இதனால் மியான்கான் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
தற்கொலைநேற்று முன்தினம் இப்ராகிம் உம்மாள் ஆத்தூரில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மியான்கான் தனது வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் வாடகை வீட்டில் குடியேறுவதற்காக அங்கு வந்தவர்கள், மியான்கான் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த மியான்கானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருந்த வீட்டை மகள் வாடகைக்கு விட்டதால், எலக்ட்ரீசியன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.