மதுரவாயல் பைபாஸ் சாலையில் வாகன சோதனை: அதிவேகமாக வந்த 25 வாகனங்களுக்கு அபராதம்
மதுரவாயல் பைபாஸ் சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
சென்னை புளியந்தோப்பில் உள்ள சென்னை கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ரமேஷ், ஜெய்கணேஷ் ஆகியோர் மதுரவாயல் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச்செல்வது, அதிக பாரம் ஏற்றிச்சென்ற வாகனங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் சென்றது என 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்தனர்.
இதில் அதிவேகமாகவும், அதிக பாரம் ஏற்றி சென்றதாகவும் 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதுபோன்ற வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story