திருவள்ளூர் அருகே பதுக்கி வைத்திருந்த 400 யூனிட் மணல் மீட்பு
திருவள்ளூர் அருகே பதுக்கி வைத்திருந்த 400 யூனிட் மணல் மீட்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்டம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஒதிக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
400 யூனிட் மணல் பறிமுதல்
அப்போது அங்கு மணல் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவை அனுமதியின்றி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு திருட்டுத் தனமாக சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 400 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கிருந்த 4 டிப்பர் லாரியையும், ஒரு பொக்லைன் எந்திரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story