அமைச்சர் செல்லூர் ராஜூ தாயார் மரணம் இன்று உடல் தகனம்


அமைச்சர் செல்லூர் ராஜூ தாயார் மரணம் இன்று உடல் தகனம்
x
தினத்தந்தி 31 Aug 2018 5:00 AM IST (Updated: 31 Aug 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

மதுரை,

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. தாயாரின் உடலை பார்த்து அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

ஒச்சம்மாளின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக செல்லூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், துரைகண்ணன், பாலகிருஷ்ணரெட்டி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ஒச்சம்மாளின் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, தத்தனேரியில் தகனம் செய்யப்படுகிறது.

Next Story