பவானி ஆற்று மணலில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் கிராமமக்கள்


பவானி ஆற்று மணலில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் கிராமமக்கள்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:00 AM IST (Updated: 31 Aug 2018 6:49 PM IST)
t-max-icont-min-icon

பவானி ஆற்று மணலில் ஊற்று தோண்டி கிராமமக்கள் தண்ணீர் எடுத்து செல்கிறார்கள்

பவானி,

பவானி அருகே தளவாய்பேட்டையில் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து பவானி ஆற்று தண்ணீரை சுத்திகரித்து கிணறு மூலம் சேகரித்து கருமாண்டிசெல்லிபாளையம், எலவமலை, ஜம்பை, வைரமங்கலம் உள்பட 20–க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தளவாய்பேட்டை குடிநீர் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக அங்குள்ள கிணறு மணல் மற்றும் கழிவுகளால் மூடப்பட்டது. அதனால் அங்கிருந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் பவானி வட்டார வளர்ச்சி அலுவார் சிவசண்முகம் (கிராம ஊராட்சி), ஆணையாளர் செல்வி மணல் மற்றும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்கள். அதைத்தொடர்ந்து தளவாய்பேட்டை பகுதியில் குடிநீர் வழங்கும் பணி தொடங்கியது. ஆற்றில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு கிணற்றில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

ஆனால் அந்த தண்ணீர் தெளிவாக இல்லை. கலங்கலாக செந்நிறத்தில் வருவதால் குடிக்க முடியவில்லை. இதனால் வைரமங்கலம் கிராமமக்கள் மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். கிராமமக்கள் அனைவரும் தினமும் பவானி ஆற்றுக்கு செல்கிறார்கள். அங்கு ஆற்று மணலில் ஊற்று தோண்டி குடங்களில் தண்ணீர் எடுத்து செல்கிறார்கள். இந்த தண்ணீர் தூய்மையானதாகவும், சுத்தமானதாகவும் இருப்பதாகவும் வைரமங்கலம் கிராமமக்கள் தெரிவித்தனர்.


Next Story