கவுன்சிலர் பதவிக்குகூட ‘சீட்’ கேட்க கமல்ஹாசன் கட்சியில் ஆட்கள் இல்லை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கு


கவுன்சிலர் பதவிக்குகூட ‘சீட்’ கேட்க கமல்ஹாசன் கட்சியில் ஆட்கள் இல்லை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கு
x
தினத்தந்தி 1 Sept 2018 4:45 AM IST (Updated: 31 Aug 2018 7:37 PM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசன் கட்சியில் கவுன்சிலர் பதவிக்கு ‘சீட்’ கேட்க கூட ஆட்கள் இல்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

தாயில்பட்டி.

சைக்கிள் பேரணி விருதுநகர் மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவையின் சார்பில் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது. சாத்தூரில் தொடங்கிய பேரணி வெம்பக்கோட்டை வந்தது. பேரணிக்கு தலைமை தாங்கிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

சாதனை படைத்துவரும் இந்த அரசு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன. அதற்கு பதிலடி கொடுத்து மக்களிடம் உண்மையை எடுத்துச்சொல்ல இந்த பேரணி நடத்தப்படுகிறது.

கமல்ஹாசன், விஷால் என்று எத்தனை நடிகர்கள் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் எல்லோரும் எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ ஆகி விட முடியாது. அவர்கள் சினிமாவில் நடித்தாலும் மக்களோடு இருந்தார்கள். அவர்களுக்காக மக்கள் விடிய, விடிய காத்திருந்தார்கள். ஆனால் இப்போதை நடிகர்களுக்காக 30 நிமிடம் கூட காத்திருக்க யாரும் தயாராக இல்லை.

கமல்ஹாசன் கட்சியில் கவுன்சிலர் பதவிக்கு கூட ‘சீட்’ கேட்க ஆள் இல்லை. எத்தனை நடிகர்கள் வந்தாலும் திராவிட கட்சிதான் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. ஒரு எக்கு கோட்டை. இடைத்தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் செம்மையாக நடந்து வருகிறது. தண்ணீர் வீணானது என்று சொல்வது தவறான கருத்து. தமிழகத்தில் 7 கோடி பேர் வசிக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.

அ.தி.மு.க வில் உண்மை விசுவாசிகளுக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்களுக்கு பதவி தேடி வரும். உழைக்காதவர்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story