கருமந்துறையில் முதல்-அமைச்சரை வரவேற்க திரண்டு வாருங்கள், அ.தி.மு.க.வினருக்கு ஆர்.இளங்கோவன் அழைப்பு
கருமந்துறையில் இன்று நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க திரண்டு வாருங்கள் என்று அ.தி.மு.க.வினருக்கு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பெத்தநாயக்கன்பாளையம்,
இது தொடர்பாக மாநில கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறையில் இன்று(சனிக்கிழமை) வனத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இந்த விழாவில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
மலைவாழ் மக்களுக்கு கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி மற்றும் கோழி வளர்ப்புக்கான கூண்டுகளை வழங்கும் முதல்-அமைச்சர், அந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைக்கிறார்.
கருமந்துறை-சின்னகல்வராயன் மலை வடக்குக்காடு ஊராட்சி பஸ் நிலையத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வாயிலை திறந்து வைக்க உள்ளார். சின்னகல்வராயன் மலை ஊராட்சி திடலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று ஊரக வளர்ச்சி துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பேரூராட்சிகள் துறைகளின் சார்பில் ரூ.12.77 கோடி மதிப்பில் முடிந்த 16 பணிகளை அவர் திறந்து வைக்கிறார்.
மின்பகிர்மான கழகம் சார்பில் ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் 2 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தீயணைப்பு துறை சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான 5 பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் 2 ஆயிரத்து 651 பயனாளிகளுக்கு ரூ.10.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ.12.78 கோடி மதிப்பீட்டில் 16 திட்டப்பணிகள் நடந்து முடிந்து உள்ளன. இந்த பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். 3 புதிய பணிகளை ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.1.25 கோடி மதிப்பிலான பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
எனவே இந்த விழாவில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து சிறப்பிக்கும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story