தூத்துக்குடியில் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
திறன் வளர்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மூலம் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
பயிற்சியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் வரவேற்று பேசினார். கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் வின்சென்ட் சுந்தர்ராஜ், வக்கீல் சொர்ணலதா, மனநல மருத்துவர் சிவசைலம் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் இல்ல நிர்வாகிகள், குழந்தைகள் நலனுடன் தொடர்புடைய துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
3,417 குழந்தைகள்
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறும் போது, இளைஞர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் 3 அரசு குழந்தைகள் இல்லம், 9 அரசு மானியம் பெறும் குழந்தைகள் இல்லம் மற்றும் 74 குழந்தைகள் இல்லங்கள் ஆக மொத்தம் 86 குழந்தைகள் இல்லங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. இதில் 3 ஆயிரத்து 417 குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக தனிநபர் பராமரிப்பு திட்டம் என்ற திட்டம் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்தும், இளைஞர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story