தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் கைப்பந்து போட்டிகள்
அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் விளையாட்டு திருவிழா தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகள் மின்னொளியில் 3 நாட்கள் நடக்கிறது. மாவட்ட அளவில் நடைபெறும் கைப்பந்து போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் கைப்பந்து அணிகளின் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.
இந்த விழாவில் தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாநில பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், பொன்னுவேல், அண்ணாதொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.
கைப்பந்து போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 86 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை இறுதிப்போட்டி நடக்கிறது. இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. இதேபோன்று மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் இன்று(சனிக்கிழமை) தொடங்கி நடக்கிறது.

Related Tags :
Next Story