கடையநல்லூரில் பயங்கரம்: பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி


கடையநல்லூரில் பயங்கரம்: பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 1 Sept 2018 2:30 AM IST (Updated: 1 Sept 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற 2பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர்,

கடையநல்லூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற 2பேரை போலீசார் கைது செய்தனர்.

டிராக்டரை ஏற்றி...

கடையநல்லூர் பகுதியில் சிலர் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபிபரிமளா மற்றும் போலீசார் மேலக்கடையநல்லூர் மலம்பட்டை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மணலை கடத்தி வந்த 2 டிராக்டர்களை மறித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றனர்.

2 பேர் கைது

அவர் சுதாரித்து கொண்டு ஓடி தப்பினார். பின்னர் அவரும், போலீசாரும் அந்த டிராக்டரில் வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்றொரு டிராக்டரில் வந்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர். விசாரணையில் அவர்கள் மேலக்கடையநல்லூர் பெரிய படுகையில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. பிடிபட்ட கடையநல்லூரை சேர்ந்த மருதுபாண்டி, சேகர் கோபி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். ஏற்கனவே இந்த கும்பல் மீது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணல் கடத்தலை தடுக்க சென்ற துணைதாசில்தார் ஏகராஜா என்பவரை வீட்டில் சிறைபிடித்து தாக்கியது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

Next Story