திருச்செந்தூர் அருகே ஆலந்தலை ஏசுவின் திருஇருதய அற்புத கெபியில் திருவிழா திருப்பலி


திருச்செந்தூர் அருகே ஆலந்தலை ஏசுவின் திருஇருதய அற்புத கெபியில் திருவிழா திருப்பலி
x
தினத்தந்தி 1 Sept 2018 2:00 AM IST (Updated: 1 Sept 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை ஏசுவின் திருஇருதய அற்புத கெபியில் திருவிழா திருப்பலி நடந்தது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை ஏசுவின் திருஇருதய அற்புத கெபியில் திருவிழா திருப்பலி நடந்தது.

ஏசுவின் திருஇருதய அற்புத கெபி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான திருச்செந்தூர் அருகே ஆலந்தலை ஏசுவின் திருஇருதய அற்புத கெபியில் 91-வது ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலி, மதியம் நவநாள் திருப்பலி, மாலையில் நற்கருணை ஆசீர் நடந்தது.

9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் திருவிழா மாலை ஆராதனை நடந்தது. தொடர்ந்து சப்பர பவனி நடந்தது.

திருவிழா திருப்பலி

10-ம் திருநாளான நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. சிறுவர்-சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. பின்னர் காலை முதல் மாலை வரையிலும் தொடர் திருப்பலிகள் நடந்தன. மாலையில் நற்கருணை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடந்தது.

விழாவில் மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு சகாயம், பங்குதந்தைகள் செட்ரீக் பீரிஸ், பென்சிகர், சந்தீஸ்டன், கிராசியுஸ், சில்வஸ்டர், ஜெயஜோதி, ரொனால்ட், ஜேம்ஸ் பீட்டர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயகுமார், உதவி பங்குத்தந்தை ரோசன் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

Next Story