சயான் ரெயில் நிலையத்தில் நீண்டதூர ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையம் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கோரிக்கை


சயான் ரெயில் நிலையத்தில் நீண்டதூர ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையம் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 1 Sept 2018 5:45 AM IST (Updated: 1 Sept 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

சயான் ரெயில் நிலையத்தில் நீண்டதூர ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என ரெயில்வே மந்திரியிடம் கேப்டன் தமிழ்ச்செல் வன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.

மும்பை, 

சயான் ரெயில் நிலையத்தில் நீண்டதூர ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என ரெயில்வே மந்திரியிடம் கேப்டன் தமிழ்ச்செல் வன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.

ரெயில்வே மந்திரியுடன் சந்திப்பு

மும்பை மலபார் ஹில்லில் உள்ள ஷயாத்ரி அரசு மாளிகையில் நேற்று கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., ரெயில்வே மந்திரி பியூஸ் கோயிலை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது தொகுதியில் உள்ள ரெயில் நிலையங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. ரெயில்வே மந்திரியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆகாய நடைமேம்பாலம்

சயான் கோலிவாடா சிந்திகேம்பில் உள்ள ஹசாரா ஓட்டலில் இருந்து ஜி.டி.பி. ரெயில் நிலையத்திற்கு புதிய ரெயில்வே நடைமேம்பாலம் கட்ட வேண்டும். ஜி.டி.பி. ரெயில் நிலையத்தில் இருந்து சுன்னாப்பட்டி ரெயில் நிலையம் இடையே ஆகாய நடைமேம்பாலம் கட்ட வேண்டும்.

வடலா ரெயில் நிலையம் 4-வது கேட்டில் இருந்து எஸ்.ஐ.டபிள்யு.எஸ். கல்லூரி இடையே ஆகாய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.

டிக்கெட் முன்பதிவு மையம்

ஜி.டி.பி. ரெயில் நிலையத் தில் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள், கழிவறைகள் கட்ட வேண்டும். கிங்சர்க்கிள் ரெயில் நிலையத்தை புதுப்பிக்க வேண்டும். சயான் ரெயில் நிலையத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலம், வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நீண்ட தூர ரெயில்கள் முன்பதிவு டிக்கெட் மையம் தொடங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கோரிக்கைகள் அனைத்தை யும் நினைவேற்றுவதாக ரெயில்வே மந்திரி உறுதி அளித்ததாக கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story