பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் சிதைந்து விட்டது ரிசர்வ் வங்கி மீது சிவசேனா தாக்கு


பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் சிதைந்து விட்டது ரிசர்வ் வங்கி மீது சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 1 Sept 2018 4:15 AM IST (Updated: 1 Sept 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இந்திய பொருளாதாரம் சிதைந்து விட்டது என கூறி, ரிசர்வ் வங்கியை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.

மும்பை, 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இந்திய பொருளாதாரம் சிதைந்து விட்டது என கூறி, ரிசர்வ் வங்கியை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் தனது கடைசி அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் 99.3 சதவீதம் தடை செய்யப்பட்ட நோட்டுகள் வங்கி பயன் பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ரூ.15.41 லட்சம் கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில், ரூ.15.31 லட்சம் கோடி திரும்பியுள்ளதாக தெரிவித்திருந்தது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கடுமையாக விமர்சிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

ஊழல் அதிகரித்துவிட்டது

நாட்டின் பொருளாதாரம் குறித்த முடிவுகள் அவசர கதியில் எடுக்கப்பட கூடாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஊழல், கருப்பு பணம் கள்ள நோட்டுகளுக்கு நிரந்தரமாக முடிவு கட்டும் என கூறினார்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இவை மேலும் அதிகரித்து உள்ளன. இதன் மூலம் பயங்கரவாத செயல்கள் கட்டுப்படுத்தப் படும் என்று அவர் கூறியது வெறும் வெற்றுப்பேச்சுதான் என்பதும் உறுதியாகி உள்ளது.

100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சிறிய அளவிலான தொழிற்சாலைகள், பல்வேறு துறைகள் இந்த முடிவால் பாதிப்புக்கு உள்ளாகின. மக்கள் மாதக்கணக்கில் வங்கிக்கு வெளியே கால்கடுக்க வரிசையில் நின்றனர். 100-க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்றே தங்கள் உயிரை இழந்தனர்.

புதிய நோட்டுகளை அச்சடிக்க ரூ. 15 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார்போல் ஏ.டி.எம்.களை மாற்றியமைக்க ரூ. 700 கோடியும், புதிய நோட்டுகளை வினியோகிக்க ரூ. 2 ஆயிரம் கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் கொடூரமானது. இதை செய்துவிட்டு அரசு வளர்ச்சி குறித்து பேசிக்கொண்டு இருந்தால், எரிந்துகொண்டி ருக்கும் வீட்டில் அமர்ந்து ஒருவர் புல்லாங்குழல் வாசிப்பதற்கு சமமானதாகும்.

இந்த நடவடிக்கை நாட்டின் கருவூலத்தை திருடுவதற்கு ஒப்பானதாகும். இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் இதை எதிர்த்திருக்கவேண் டும். ஆனால் தற்போதைய ஆட்சியின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி போதையில் தள்ளாடும் குரங்கு போல் ஆகிவிட்டது.

இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

Next Story