பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உஷா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சாந்தி, டி.எண்.ஜி.இ.ஏ. வட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, வட்ட பொருளாளர் பாலதண்டாயுதம், ஊராட்சி செயலாளர் சங்க நிர்வாகி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வன், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு உணவு மானியத்தை ஒரு மாணவருக்கு ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் செல்வி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story