பெருகி விட்ட வாகன போக்குவரத்தால் கல்லணை பாலம் வலுவிழக்கும் அபாயம்
பெருகி விட்ட வாகன போக்குவரத்தால் கல்லணை பாலம் வலுவிழக்கும் அபாயம் உள்ளதால் இங்கு வாகன போக்குவரத்தை தடை செய்து பாலத்தை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி,
உலகிலேயே ஒடும் ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்ட இயலும் என்பதை நிருபிக்கும் அணையாக திகழ்வது மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை ஆகும். பெரும் பாறைகளை கொண்டு கட்டப்பட்ட கல்லணை பெரும் வெள்ளங்களை சந்தித்து வந்துள்ளது. கடுமையான புயல், வெள்ளம் போன்றவை கல்லணையை தாக்கியபோதிலும் எந்தவிதமான சேதமும் இன்றி காவிரி பாசன பகுதி நீர் பங்கீட்டை சரியாக செய்து வருகிறது கல்லணை.
கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், தோகூர் வடிகால் வாய்க்கால் என பாலங்கள். அதன் மீது நீரை பங்கீட்டு வழங்கிட மாபெரும் ஷட்டர்கள். அந்த ஷட்டர்களை இயக்கிட மின் அமைப்புகள் என வலுவான அடித்தளத்துடன் அமைந்து காவிரி பாசன பகுதிகளை காத்து வருவது கல்லணை.
கல்லணை அமைக்கப்பட்டதில் இருந்து காவிரி பாலங்களில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்த காலத்தில் திருச்சியில் இருந்து பஸ்களில் வருபவர்கள் தோகூர் பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து வந்து வெண்ணாற்று கரைக்கு வந்து திருக்காட்டுப்பள்ளிக்கு பஸ் ஏறிச் செல்வார்கள்.
இதேபோல் திருவானைக்காவல் பகுதியில் இருந்து பஸ்களில் வருபவர்கள் கல்லணை கிளிக்கூடு கிராமத்தின் அருகில் இறங்கி கொள்ளிடம் பாலத்தை நடந்தே கடந்து வந்து திருக்காட்டுப்பள்ளிக்கு பஸ் ஏறுவார்கள். பண்டைய காலங்களில் அதிக அளவில் கார், மினி லாரி, மினி வேன் இல்லாத காலமாக இருந்ததால், போக்குவரத்துக்கு மக்கள் பஸ்களை மட்டுமே நம்பி இருந்த காலம். அதனால் அணையின் மீது நடந்து வருபவர்களே அதிகமாக இருந்தார்கள்.
காலமாற்றத்திற்கேற்ப தற்போது அதிக அளவில் வாகனங்கள் பெருகி விட்டன. கல்லணை பாலங்களில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன், கார், பெரிய வேன், கல்லூரி பஸ்கள் என கனரக வாகனங்கள் தாராளமாக பாலங்களில் சென்று வருகின்றன.
மேலும் மினி வேன்கள், விவசாய விளைபொருட்களை ஏற்றிக்கொண்டும் பாலங்களை கடந்து சென்று வருகின்றன. இது மட்டும் அல்லாமல் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு மினி வேன்களில் மணல் கடத்தலும் நடைபெற்று வருவதாக சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லணை சுற்றுலா தலமாக இருப்பதால் திருச்சி, தஞ்சையில் இருந்து விடுமுறை நாட்களில் ஏராளமானோர் கார், வேன்களில் கல்லணைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் பாலத்தை அடிக்கடி கடந்து செல்வதால், வாகன ஒட்டிகளால் பாலத்திற்கு சேதம் ஏற்படக்கூடும் என்றும், பாலம் வலுவிழந்து வருவதாகவும் விவசாயிகள் அஞ்சுகின்றனர். எனவே கல்லணை பாலங்களில் வாகனப்போக்குவரத்்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஏராளமான வாகனங்கள் வேகமாகவும், அதிக பாரம் ஏற்றிக்கொண்டும் செல்வதால் வாகனங்களால் ஏற்படும் அதிர்வால் பாலம் பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
காலத்தை வென்று நிற்கும் பாலத்தை காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு. இதை மனதில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.
தற்போது வாகனங்களில் வருவோர் வேறு வழிகளில் சென்றால் சற்று தூரம் அதிகமாக ஆகும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை. பாலத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருந்தால் சற்று சுற்றி செல்வதால் நஷ்டம் ஏதும் இல்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story