பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டி முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டி முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Sept 2018 3:00 AM IST (Updated: 1 Sept 2018 11:38 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலை இலக்கிய போட்டியை முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலை இலக்கிய போட்டியை முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் தொடங்கி வைத்தார்.

கலை இலக்கிய போட்டி

பொது நூலக இயக்ககம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளை சிந்தனைத்திறன், நற்பண்புகள், பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் கொண்ட புதிய படைப்பாளர்களாக உருவாக்கும் வகையில் கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வட்டார அளவிலான போட்டிகள் ஏற்கனவே நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட அளவிலான கலை இலக்கிய போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர்(பொறுப்பு) ராம்சங்கர் வரவேற்று பேசினார்.

விருது

தொடர்ந்து ‘வாழ்வுக்கு உயர்வு தருவது வாசிப்பே’ என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், ‘வாசித்தேன் வளர்ந்தேன்’ என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், ‘என் எதிர்காலம் என் கையில்’ என்ற தலைப்பில் கவிதை போட்டியும் நடந்தது. இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு இளம் படைப்பாளிகள் விருது நவம்பர் மாதம் 14-ந் தேதி நடைபெறும் நூலக வாரவிழாவில் வழங்கப்பட உள்ளது.

Next Story