தூத்துக்குடியில் தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடக்கம்
தூத்துக்குடியில் தபால் நிலையங்களில் நேற்று வங்கி சேவை தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தபால் நிலையங்களில் நேற்று வங்கி சேவை தொடங்கப்பட்டது.
வங்கி சேவை
தபால் நிலையங்களில் வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சேவையை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம், மேலூர் தபால் அலுவலகம், ஆரோக்கியபுரம், மீளவிட்டான், சிலுவைப்பட்டி ஆகிய தபால் அலுவலகங்களில் வங்கி சேவை தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, சேவையை தொடங்கி வைத்தார். கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. தூத்துக்குடி கோட்ட உதவி கண்காணிப்பாளர்கள் சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், கர்னல் சுந்தரம், தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா தலைவர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். வங்கி கிளை மேலாளர் பிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார்.
முன்னதாக, தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள தபால் வங்கி அலுவலகத்தை கீதாஜீவன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதேபோன்று தூத்துக்குடி மேலூர் தபால் அலுவலகத்தில் தொழில் அதிபர் விஜயானந்தம், ஆரோக்கியபுரம் தபால் அலுவலகத்தில் காமராஜ் கல்லூரி துணைத்தலைவர் திவாகர், மீளவிட்டான் தபால் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு முத்தையா, சிலுவைப்பட்டியில் தாளமுத்துநகர் ஆர்.சி.பள்ளி தாளாளர் இருதயராஜா ஆகியோர் தலைமை தாங்கி வங்கி சேவையை தொடங்கி வைத்தனர். விழாவில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story