குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைப்போரின் கனவு பலிக்காது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைப்போரின் கனவு பலிக்காது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
சிவகாசி,
அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசும்போது கூறியதாவது:–
சிலர் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றைக்கு காவிரி, பாலாறு, தாமிரபரணியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் சிலரின் கனவு பலிக்காது. அ.தி.மு.க. அரசிற்கு பொதுமக்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.பி., சந்திரபிரபா எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.