பாளையங்கோட்டையில் தபால் துறை வங்கி சேவை எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த் தொடங்கி வைத்தனர்
பாளையங்கோட்டையில் தபால் துறை வங்கி சேவையை எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த் தொடங்கி வைத்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் தபால் துறை வங்கி சேவையை எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த் தொடங்கி வைத்தனர்.
வங்கி சேவை
“இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க்” எனப்படும் தபால் துறையின் வங்கி சேவையை, நேற்று டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.
இதையொட்டி நெல்லை அஞ்சல் கோட்டத்தில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம், களக்காடு துணை தபால் நிலையம், பத்தை, சிங்கம்பத்து, படலையார்குளம் ஆகிய கிளை தபால் நிலையங்களிலும் நேற்று வங்கி சேவை தொடங்கப்பட்டது.
இதன் தொடக்க விழா பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு விஜிலா சத்யானந்த் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை மேலாளர் சாந்தகுமார் வரவேற்று பேசினார். அங்கு வைக்கப்பட்டு இருந்த பெரிய திரையில் பிரதமர் மோடி பேசுவது வெளியிடப்பட்டது. இதனை மாணவ-மாணவிகள் பார்த்தனர்.
எம்.பி.க்கள் திறந்து வைத்தனர்
பாளையங்கோட்டை தலைமை தபால் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள வங்கிக் கிளையை எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர். டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முதல் வங்கி கணக்கை தொடங்கி வைத்தார்.
விழாவில் உதவி கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா, தபால் வங்கி முதுநிலை மேலாளர் விஜய், மக்கள் தொடர்பு அலுவலர் சபாபதி, தபால் அதிகாரிகள் ராமச்சந்திரன், ராமசுப்பிரமணியன், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தயாசங்கர், விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தி.மு.க. பகுதி செயலாளர் பூக்கடை அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story