கடையநல்லூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


கடையநல்லூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 2 Sept 2018 2:30 AM IST (Updated: 2 Sept 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உதவி கலெக்டர் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கடையநல்லூர், 

கடையநல்லூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உதவி கலெக்டர் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இளம்பெண் தற்கொலை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையம் அருகே வசிப்பவர் சிதம்பர ஈஸ்வரன். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 26). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் சென்னையில் வேலை செய்வதால், பாக்கியலட்சுமி தனது குழந்தைகளோடு மாமனார் பாலகுருநாதன், மாமியார் கிருஷ்ணம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி திடீரென உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுபற்றி பாக்கியலட்சுமியின் தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புளியங்குடி துணை சூப்பிரண்டு ஜெயகுமார் விசாரணை நடத்தினார். பாக்கியலட்சுமிக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளே ஆவதால், இதுபற்றி தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜன் மேல் விசாரணை நடத்த உள்ளார்.

கடையநல்லூர் போலீஸ் நிலையம் அருகே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story