உத்திரமேரூர் அருகே குடோனில் ரூ.5 லட்சம் குட்கா பதுக்கிய 2 பேர் கைது


உத்திரமேரூர் அருகே குடோனில் ரூ.5 லட்சம் குட்கா பதுக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2018 5:09 AM IST (Updated: 2 Sept 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே குடோனில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரணகாவூர் கிராமத்தில் ஆந்திராவை சேர்ந்த கிருஷ்ணா (வயது 41) என்பவர் விவசாய பண்ணையை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த பண்ணையில் அடிக்கடி வேன்கள் வந்து செல்வதாகவும், அட்டைப்பெட்டியில் பொருட்கள் ஏற்றி இறக்குவதுமாக உள்ளது என்று சாலவாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அந்த விவசாய பண்ணைக்கு வந்து சோதனை செய்தனர்.

ரூ.5 லட்சம்

அப்போது அந்த பண்ணையில் உள்ள குடோனில் ஏராளமான அட்டைப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. சோதனை செய்ததில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் அந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து விவசாய பண்ணையின் குத்தகைதாரர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். மேலும் குட்கா பதுக்கியதில் காஞ்சீபுரத்தை சேர்ந்த வெங்கடேசன்(41) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரையும் கைது செய்தனர்.

Next Story