படப்பை அருகே லாரி-கார் மோதல்; 2 பேர் பலி


படப்பை அருகே லாரி-கார் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Sept 2018 5:19 AM IST (Updated: 2 Sept 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே லாரி- கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் பெரிய காஞ்சீபுரம் ஒலி முகமது பேட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் முகம்மது அனஷ் (வயது 20). காஞ்சீபுரம் அமீத் அஷ்லியா நகர் தர்கா காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் முகமது பர்வேஷ் (27). சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). வாலாஜாபாத் பகுதி வெங்குடியை சேர்ந்தவர் யுவகுமார் (26.) வாலாஜாபாத் டவுன் பகுதியை சேர்ந்தவர் மதன் (26). காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் அறிவழகன் (26).

அதே பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (26) இவர்கள் அனைவரும் யுவகுமாருக்கு சொந்தமான காரில் நேற்று அதிகாலை காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு சென்றனர். காரை விக்னேஷ் ஓட்டினார். அந்த கார் வண்டலூர்- வாலாஜாபாத் சாலை வழியாக சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது படப்பையை அடுத்த சாலமங்கலம் கூட்ரோடு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே ஒரகடம் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடிக்கும் போது பின்னால் வந்த கார் லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் கார் நொறுங்கி யது. காரில் இருந்த முகம்மது அனஷ், முகம்மது பர்வேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் காரின் உள்ளே படுகாயமடைந்து கிடந்த 5 பேரையும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு படப்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story