திருவள்ளூர் மாவட்டத்தில் 31 லட்சத்து 71 ஆயிரத்து 995 வாக்காளர்கள் கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் 31 லட்சத்து 71 ஆயிரத்து 995 வாக்காளர்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2018 5:29 AM IST (Updated: 2 Sept 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் 31 லட்சத்து 71 ஆயிரத்து 995 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2018-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் 2018-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 583 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலானது ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் உள்ளது. பொதுமக்கள் மேற்குறிப்பிடப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வாக்காளர் விவரம்

வரைவு வாக்காளர் பட்டியல் 2018-ன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் விவரம்

கும்மிடிப்பூண்டி: ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 389, பெண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 928, இதரர் 32, மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 349.

பொன்னேரி (தனி): ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 619, பெண்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 543, இதரர் 60 மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 222.

திருத்தணி: ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 593, பெண்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 376, இதரர் 29, மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 998.

திருவள்ளூர்: ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 567, பெண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 853, இதரர் 23 மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 443.

பூந்தமல்லி (தனி): ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 58 ஆயிரத்து 2, பெண்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 461, இதரர் 47, மொத்தம் 3 லட்சத்து 19 ஆயிரத்து 510.

ஆவடி: ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 608, பெண்கள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 626, இதரர் 83, மொத்தம் 3 லட்சத்து 91 ஆயிரத்து 317.

அம்பத்தூர்

மதுரவாயல்: ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து ஆயிரத்து 240, பெண்கள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 953, இதரர் 119, மொத்தம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 312.

அம்பத்தூர்: ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 74 ஆயிரத்து 336, பெண்கள் 1 லட்சத்து 72 ஆயிரத்து 657, இதரர் 94, மொத்தம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 87.

மாதவரம்: ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 936, பெண்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 876, இதரர் 86, மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரத்து 898.

திருவொற்றியூர்: ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 528, பெண்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 207, இதரர் 124, மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 859.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மொத்த ஆண் வாக்காளர்கள் 15 லட்சத்து 76 ஆயிரத்து 818, பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 94 ஆயிரத்து 480. இதரர் 697 என மொத்தம் 31 லட்சத்து 71 ஆயிரத்து 995 வாக்காளர்கள் உள்ளனர்.

சிறப்பு முகாம்

மேலும் 1-1-2019 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் இது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்து தற்போது புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழைகள் போன்றவற்றை திருத்தம் செய்ய படிவம் 8-ம், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய படிவம் 8-ஏவும் தங்களது குடியிருப்புக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்ட இடங்களான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சிறப்பு முகாம் நாட்களான 9-9-2018, 23-9-2018, 7-10-2018 மற்றும் 14-10-2018 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9½ மணி முதல் மாலை 5½ மணி வரை நேரில் சென்று படிவங்களை பூர்த்தி செய்து பிறந்த தேதி மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவணங்களின் நகல்களுடன் மனு அளித்து தங்களது தேவையை பொதுமக்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story